என் கண்கள் ஏனோ உன்னைதேடின
உன் கண்களும் என்னையெ தேடின
நான் ஒளிந்து கொண்டால் ஏனொ வாடின
என்னைக் காணாமல் எதையோ தேடின
என்னைக் கண்டவுடன் ஏனோ வேறுபக்கம் ஓடின - ஏன்
உன் நினைவுகள் என் கண்வளியே இதயத்தை நாடின
கல்வி எனும் கண்களும் என்னை தேடின
நான்கு சுவர்கள் என்னை மூடின
காலங்கள் ஏனொ கடந்து ஓடின
என் கண்கள் உன்னை காணாமல் வாடின
என் இதய துடிப்பை விட உன் நினைவுகள் கூடின
என் இதயத்தின் ஒரு அறையை அல்ல
முழு அறையையும் உனக்கென ஒதுக்கி வைத்தேன் - உன்
கண்ணில் இருந்து இதயம்வரை சென்றிருப்பேன் என
நானெ நினைத்திருந்தேன்
அந்த ஒரு நினைப்பில் என் இதயத்தை அனுப்பிவைத்தேன்
என் உயிரின் வலிகளை நீ உணரவில்லை
உன் உறவின் விலைகளோ எனக்கு தெரியவில்லை
எதை எதையோ இழந்தேன் விலையாக
என் நம்பிக்கை மட்டும் இழக்கவில்லை
சில இதயங்கள் என் இதயத்திற்காய் தம் இதயம் தந்தன
என்னிடம் இதயம் இல்லை என அறியமல் என்னை தேடி வந்தன.
என்னிடமோ வேறு இதயமில்லை
இரு இதயம் இருந்திருந்தால் ஒரு இதயம் கொடுத்திருப்பேன்
அவன் படைத்ததோ ஒரு இதயம்
உறவென உன்னை நினைத்திருந்தல்
பிரிவு பற்றியும் நினைத்திருப்பேன்
உயிர் என உன்னை நினைத்துவிட்டேன்
உன்னை பிரிந்து விட்டால் இறந்திருப்பேன்
இறந்து விட்டால் மட்டுமே.......மறந்திருப்பேன்
அது வரை உனக்காக காத்திருப்பேன்......................................................................................................
0 comments:
Post a Comment