Ads 468x60px

10-15

10.
எனக்குப் புரிகிறது நீ என்னை
வெறுக்க வில்லை
வெறுப்பதுபோல் நடிக்கிறாய்
என்று
உனக்கு புரியவில்லயா ?
நீ நடிப்பது கூட
எனக்கு வலிக்கிறது என்று

11.
உன்னை நெருங்காமலே
இருக்க கற்றுக்கொள்கிறேன்
நீ என்னை
விலகி விடுவாயோ எனும் பயத்தில்

12.
உன் மௌனம் பார்த்து பார்த்து
ஊமையாகிப்போன என்னிடமே
நீ வந்து கேட்கிறாய்
ஏன் இந்த மௌனம் என்று

13.
வீதியோரத்தில்நானிருக்க
என்னைக் கடந்து நீ போக
ஓரக்கண்ணால்புன்னகைப்பாய்...
உயிர் உறைந்து போவேன்நான்...!!

14.
நேற்று இரவு கடவுள் என்கனவில் வந்து
என்ன வரம் வேண்டும் கேள் என்றார்?
நான் உன்னை கேட்டேன்...
மறுத்துவிட்டார்.......
சொர்கத்தை எல்லாம்வரமாக
 கொடுப்பதில்லையாம்...!!! -this is not a poem 

15
பாசங்களெல்லாம் வேசங்களாகி
முகமூடிகள் கிழிக்கப்பட்டாலும்
நேசங்களெல்லாம் போலிகளாகி
நிஜங்களெல்லாம் நிழலானாலும்
உறவு ஒன்று வேண்டும்............
அது உனது வடிவில் வேண்டும்......

0 comments:

Post a Comment

 
 
Blogger Templates